அக்கரைப்பற்று ஸகாத் நிதியம் பற்றி................

 

அல்லாஹ்வின் கட்டளையாகிய ஸகாத்தினைக் கூட்டாக நிறைவேற்றுவதன் பொருட்டு, சில முன்னோடிகளால் உருவாக்கப்பட்டு தூர்ந்து கிடந்த ஸகாத் அமைப்பு கடந்த 2000.02.18ல் ”ஸகாத் நிதியம்” என்ற பெயரில்  அல்லாஹ்வின் ஏற்பாட்டில் சில கனவான்களின் முயற்சியினால் மீண்டும் புத்துளிரளிக்கப்பட்டுள்ளது.

அந்நிய கலாச்சாரங்களுக்குள் சிக்கி, நலிவடைந்து கிடக்கும் எமது சமூகத்தில் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஆதரவாக செயற்பட வேண்டும் என்ற சிந்தனையே இந்நிதியம் மீண்டும் உதயம் பெற காரணமாயிற்று அல்ஹம்துலில்லாஹ்.

 ஸகாத் என்பது அருள், அபிவிருத்தி, வளர்ச்சி, தூய்மை என மொழி ரீதியாக கருத்துக் கூறப்படுகின்றது. இது அல்லாஹ் முஸ்லீம்களுக்குக் கடமையாக்கிய தொழுகையைப் போன்ற ஓர் வணக்கமாகவும் அமைந்துள்ளது.  ஷரீஆவின் பார்வையில் ஸகாத் என்பது முஸ்லீம்களின் செல்வத்தில் அல்லாஹ் விதியாக்கிய ஒரு குறித்த அளவுமாகும். அது அல்குர்ஆன் குறிப்பிட்ட கூட்டத்தினருக்கு வழங்கப்படும்.

தன்மீது விதியாக்கப்பட்ட ஸகாத் கடமையை ஒருவர் நிறைவேற்றுவதன் மூலம் அவரது பொருளாதாரம் அபிவிருத்தியடையும், வளர்ச்சியடையும் என்பதோடு அது பாதுகாப்பையும், தூய்மையையும் கொடுக்கின்றது. இது பற்றி அல்குர்ஆன் வசனங்கள் பல காணப்படுகின்றன.

 • "(நபியே! அவர்களின் சொத்துக்களிலிருந்து ஸகாத்தை எடுத்து அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவீராக)”                 (9-103)
 • அவர்களின் பொருள்களில் (பிறருக்கு) நிர்ணயிக்கப்பட்ட பங்குண்டு. யாசிப்போருக்கும்,  வறியோருக்கும் அவற்றில் பங்குண்டு.       (70:24-25)
 • "தொழுகையை நிலைநாட்டுங்கள், ஸகாத்தினைக்  கொடுத்து வாருங்கள்”                                                                                             (2:110)

ஸகாத்தைக்  கொடுக்காதோரை குர்ஆனும், சுன்னாவும் பல இடங்களில் எச்சரிக்கின்றது. நபி (ஸல்) அவர்கள் இது பற்றி குறிப்பிடும்போது...........

 • யார் தனக்கு அல்லாஹ் வழங்கிய செல்வத்திலிருந்து அதன் ஸகாத்தைக் கொடுக்கவில்லையோ, மறுமையில் அவனுக்கு வழுக்கைத் தலையுடன் ஒரு விஷப்பாம்பு சாட்டப்படும். அதன் இரு கண்களுக்கும் மேலாக இரு கரும்புள்ளிகள் இருக்கும். அது அவனது உடலைச் சுற்றி வளைத்துக் கொள்ளும். பின்னர் அது அவனது கண்களைத் தீண்டியவாறு ”நான் உனது செல்வம், நான் உனது பொக்கிஷம் எனக் கூறும்”
 • ”ஸகாத்தை தடுத்துக் கொள்ளும் சமூகத்தினரை அல்லாஹ் பஞ்சத்தைக் கொண்டு சோதிப்பான்”                                         (ஆதாரம் - அத்தபரானி)
 • ”ஸகாத்தைச் செலுத்தாக மக்களுக்கு வானம் மழை பொழியாது. கால்நடைகள் இல்லையெனில் பூமிக்கும் மழையே கிடைக்காது”                   (ஆதாரம் - இப்னுமாஜா) 

அன்புள்ளம் கொண்ட இறைநேசர்களே! தொழுகை எவ்வாறு கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டுமோ!  அவ்வாறே ஸகாத்தும் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டியதாகும். இது தனி மனித விவகாரமாக எமக்குத் தோன்றலாம். இது ஒரு கூட்டுக் கடமை மாத்திரமல்லாது இது ஒரு இஸ்லாமிய சமூக விவகாரமாகும்.

இதனை அல்குர்ஆனும், அல்ஹதீஸும் பல இடங்களில் தெளிவு படுத்துகின்றன. ”நபியே! அவர்களின் செல்வத்திலிருந்து ஸகாத் நிதியை (வசூல் செல்து)  கைப்பற்றுவீராக! (9:101) என அல்குர்ஆன் குறிப்பிடுகின்றது. அண்ணல் நபி (ஸல்) அவர்கள் முஆது பின் ஜபல் (றழி) அவர்களை ஸகாத் வசூலிப்பதற்காக யமன் நாட்டிற்கு அனுப்பிய போது

அல்லாஹ் செல்வந்தர்கள் மீது ஸகாத்தினைக் கடமையாக்கியுள்ளான் அது வசூல் செய்யப்பட்டு ஏழைகளிடையே பகிர்ந்தளிக்கப்படல் வேண்டும் என்ற செய்தியை சொல்லிவிடுங்கள்”       எனக் கூறி அனுப்பி வைத்தார்கள்.      (புகாரி, முஸ்லிம்)

இவ்வுபதேசங்கள் இவ்வாறிருக்க நாங்கள் ஒரு சில மூடைகளையும், சிறு தொகைப் பணத்தையும் எமது உறவினர்களுக்கு வழங்கிவிட்டு ஸகாத்தை நிறைவேற்றி விட்டோம் என மார் தட்ட முடியாது. முறையாக கணிப்பிடாது நாம் செய்யும் தர்மம் எல்லாம் ஸதக்காவாகவே சேரும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் நல்லடியார்களே!  அல்லாஹ் எமக்கு இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் தர வேண்டுமென ஆதரவு வைத்தவர்களாக அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தோடு இணைந்து,  இஃலாஸான முறையில் ஸகாத்தைக் கணிப்பிட்டு வழங்கி ஏழைகளின் துயர் துடைத்து அல்லாஹ்வின் நல்லருளைப் பெற்ற கூட்டத்தில் நம் அனைவரையும் இறுதி மூச்சுவரை ஆக்கி வைக்க துஆச் செய்வோம்.

                                                     அல்ஹம்துலில்லாஹ்!

 

                             ஆலோசனை சபை

 • உலமா சபை (ஜம்இயதுல் உலமா) அக்கரைப்பற்று
 • கௌரவ தலைவர் - ஜும்ஆ பெரிய பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - பட்டின ஜும்ஆ பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - ஜும்ஆ புதுப்பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - காதிரியா ஜும்ஆ பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - நூறாணியா ஜும்ஆ பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - பத்ர் ஜும்ஆ பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - பள்ளிக்குடியிருப்பு ஜும்ஆ பள்ளிவாசல்
 • கௌரவ தலைவர் - பட்டியடிப்பிட்டி ஜும்ஆ பள்ளிவாசல்

     

                              நிருவாக சபை

 • தலைவர் : அஷ்ஷேய்க் AM. றகுமத்துல்லாஹ் (DDE,  SLEAS)
 • உப தலைவர் :  அல்ஹாஜ் SLM. அலியார் (Eng. RDI)
 • செயலாளர் :  அல்ஹாஜ் MIM. இல்யாஸ் (Pr.)
 • உப செயலாளர் : அல்ஹாஜ் S. றியாஸ் (JP & Tr.)
 • பொருளாளர் : அல்ஹாஜ் MMA. எக்கீன் (Tr.)
 • நிருவாகச் செயலாளர் : சகோ. SM. றபாயில் (Acct.)

                   

                      ஏனைய உறுப்பினர்கள்

 • அல்ஹாஜ் ST. அப்துல் அஸீஸ் (JP)
 • மௌலவி அல்ஹாஜ் AM. அப்துல் றாசீக் (Lect. SEUSL)
 • சகோதரர் MHA. வஹாப் (MA H/R)
 • சகோதரர் AC. நளீர் (PM)
 • சகோதரர் MA. அலாவுடீன் (Tr)
 • அல்ஹாஜ் AL. செய்னுடீன் (Pr.)
 • சகோததர்  MIM. உவைஸ் (Pr.)
 • அல்ஹாஜ் MLM. லாபீர் (ADE)

 

                      கணனி மயமாக்கல் பிரிவு

                       சகோதரர் நளீர் ஏ. காதர் (PM)

 

      ஸகாத் கடமையாகும் பொருட்களும் அவற்றின் அளவுகளும்

பல பொருட்களின் மீது ஸகாத் கடமையாக்கப் பட்டிருந்தாலும், எமது பிரதேச நடைமுறைக்கேற்ப பின்வரும் பொருட்களுக்கான ஸகாத்தின் அளவுகளை முன்வைக்கின்றோம். யாரிடம் கீழ்க் குறிப்பிடப்படும் அளவுகளில் பொருட்கள் உள்ளனவோ, அவர்கள் மீது ஸகாத் கடமையாகும்.

 

 

                                                    நெல் :  

 இது 5 வசகுகள் விளைந்தால் ஸகாத் கடமையாகும். அதாவது652.5 கிலோ கிராம் (ஏறக்குறைய 653 Kg) நெல் விளைந்தால் ஸகாத் கடமையாகும். இவ் விளைச்சல் செலவுடன் கூடிய நீர்ப்பாசனமாயின் விளைச்சலில் 1/20 பங்கு விகிதமும், நீர்ப்பாசன செலவுகள் எவையும் இல்லையெனில் 1/10 பங்கை ஸகாத்தாகக் கொடுக்க வேண்டும். இதன் ஸகாத் விளைந்தவுடன் கொடுக்க வேண்டும்.

 

                                                    மாடு :

 30 மாடுகள் ஒருவரிம் ஒரு வருடம் பூரணமாக இருந்தால் மாத்திரமே ஸகாத் விதியாகும். அதற்கேற்ப பின்வரும் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் ஸகாத் வழங்க வேண்டும்.

 

          மாடுகள் தொகை                     ஸகாத் கொடுக்க வேண்டிய அளவு

 

                    30                                          1 வருடம் பூர்த்தியான 1 மாடு

                    40                                          2 வருடம் பூர்த்தியான 1 மாடு

                    60                                          1 வருடம் பூர்த்தியான 2 மாடு

                    70                                          2 வருடம் பூர்த்தியான 1 மாடும்

                                                                  1 வருடம் பூர்த்தியான 1 மாடும்

                    90                                          1 வருடம் பூர்த்தியான 3 மாடு

                   100                                         2 வருடம் பூர்த்தியான 1 மாடும்

                                                                  1 வருடம் பூர்த்தியான 2 மாடும்    

 

                                                  ஆடு :

 

40 ஆடுகள் ஒரு வருடம் பூரணமாக இருந்தால் ஸகாத் கடமையாகும்.

 

                    01  -    39   ஆடுகளுக்கு ஸகாத் கடமையாகாது.

                    40  -   120  ஆடுகளுக்கு           -              1 ஆடு

                   121 -   200  ஆடுகளுக்கு           -              2  ஆடுகள்

                   201 -   399  ஆடுகளுக்கு           -              3  ஆடுகள்

                   400 -   499  ஆடுகளுக்கு           -              4  ஆடுகள்

                   500 -   599  ஆடுகளுக்கு           -              5  ஆடுகள்

                   ஏனைய 100 ஆடுகளுக்கு ஒரு ஆடு வீதம் வழங்கப்படும்.

 

                                                பணம் :

85 கிராம் தங்கத்தின் நிறை எவ்வளவு பணம் பெறுமதியைக் கொண்டிருக்குமோ, அவ்வளவு பணம் சேமிப்பாகக் காணப்பட்டால் ஒரு வருட முடிவில் 2  1/2 வீதம் ஸகாத் வழங்கப்படல் வேண்டும். 

 

                                                 தங்கம் :

வழக்கமாக அணியும் தங்க ஆபரணங்களைத் தவிர்த்து, ஏனைய இருப்பிலுள்ள தங்கம் 85 கிராம் நிறையுடையதாக வருடம் ஒன்று கடந்திருந்தால் 2  1/2  வீதம் ஸகாத் வழங்க வேண்டும்.

 

                                   வியாபாரப் பொருட்கள் :

ஒரு வியாபாரி தான் வியாபாரத்தை ஆரம்பித்த தினத்திலிருந்து ஒரு வருடம் முடிந்ததும் தனது வியாபாரத் தளத்தில் இருக்கும் அனைத்து வியாபாரப் பொருட்களையும் அன்றைய சந்தைப் பெறுமானத்திற்கேற்ப கணிப்பிட வேண்டும். பின்னர் அவ்வியாபாரப் பொருட்களில் காணப்படும் எப்பொருளுக்காவது கடன் வரவேண்டியிருந்தால் அக்கடனைக் கூட்டி (அறவிட முடியாக் கடனைத் தவிர்த்து) அவ்வியாபாரம் தொடர்பாக கொடுக்க வேண்டிய கடனைக் கழித்து வருகின்ற பெறுமானம் 85 கிராம் தங்கத்தின் விலையை ஒத்திருந்தால் ஸகாத் 2  1/2 வீதம் கொடுக்க வேண்டும்.

 

                                           புதையல் :

முற்காலத்து மனிதர்கள் பூமியில் புதைத்து வைத்திருந்த செல்வங்களே பிற்காலத்தில் புதையல்களாக கருதப்படுகன்றன. அது தங்கம், வெள்ளி, செம்புகளாக இருந்த போதிலும் அதன் 1/5 பகுதியினை ஸகாத்தாக செலுத்த வேண்டும். இது கிடைத்தவுடன் வழங்கப்பட வேண்டும்.

 

                        சுய தொழில்களும், உத்தியோகமும் :

85 கிராம் தங்கத்திற்கு எவ்வளவு பணப் பெறுமானம் வருகின்றதோ, அத்தொகையை மாத வருமானமாக பெறுகின்றவர்கள்  2  1/2 வீதம் ஸகாத் கொடுக்க வேண்டும்.

                                                 அல்ஹம்துலில்லாஹ்.

 

ஸகாத் பெறுவோர்

 

 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்

அக்கரைப்பற்று ஸகாத் நிதியத்தின் 21 - 28 வரையான 08 போகங்களின் கணக்கறிக்கைப் புத்தகம் அச்சிடப்பட்டு, ஸகாத் கடமையை நிறைவேற்றுபவர்களின் கைகளில் ஒப்படைப்பதற்காக ஸகாத் நிதிய நிருவாக சபையினர் ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றனர். மட்டுமல்லாது 30 வது போகத்திற்கான ஸகாத் வினியோகத்தினையும் எதிர்வரும் றமழான் மாதத்திற்கு முன்பே வழங்குவதற்கு தேவையான பொருட்களையும், இதர பணிகளையும் செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை அன்பாய் அறியத் தருகின்றோம்.   அல்ஹம்துலில்லாஹ்.                                             

-ஸகாத் நிதிய நிருவாகம்-

 

ஸகாத் நிதியம்,

அனைத்துப் பள்ளிவாயல்கள் சம்மேளனம்,

பட்டின ஜும்ஆ பள்ளிவாசல் கட்டிடம்,

அக்கரைப்பற்று

 

தொலைபேசி இல: 067 2278706

மின்னஞ்சல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. & This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

இணையம் : www.zakathakp.com